UAE Tamil Web

அமீரகத்தில் சேமிப்புக் கிடங்கை சாம்பலாக்கிய தீ விபத்து..!

fire accident

உம் அல் குவைனின் உம் அல் தூப் பகுதியில் உள்ள இன்டஸ்ட்ரியல் ஏரியாவில் அமைந்துள்ள கிடங்கு ஒன்றில் நேற்று தீவிபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து, உம் அல் குவைன் சிவில் பாதுகாப்புப்படை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்திருக்கிறது.

சிவில் பாதுகாப்புப் படையின் தீயணைப்புத்துறையானது, அஜ்மான் மற்றும் ராஸ் அல் கைமா சிவில் பாதுகாப்புப் படையின் உதவியுடன் இந்தத் தீயை அணைத்திருக்கிறது.