சமூக நெறியை அனைத்து மக்களும் சரிவர கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அமீரக பொது வழக்குத்துறை சமூக ஊடகங்கள் வாயிலாக அமீரக அரசின் சட்ட திட்டங்களை விளக்கி வருகிறது.
அதன்படி, பொது இடங்களில் கத்துதல், பாடுதல், சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகியவை அமீரகத்தில் குற்றம் எனவும் இதற்கு 1 வருடம் சிறைத்தண்டனை மற்றும்/அல்லது 1 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனவும் பொது வழக்குத்துறை எச்சரித்திருக்கிறது.
அமீரக தண்டனைச் சட்ட எண் 361 ன் படி பொது இடத்தில் பிறரது கருத்தைக் கவரும் வகையில் அநாகரீகமாக நடந்துகொள்தல் குற்றம் என பொது வழக்குத்துறை தெரிவித்துள்ளது.
