UAE Tamil Web

“லைசன்ஸ் இல்லையென்றால் எந்த வாகனத்தையும் ஓட்டாதீர்கள்.. – இல்லையென்றால் இந்த தண்டனைக்கு தயாரா இருங்க” – அமீரக காவல்துறையின் எச்சரிக்கை..!

Car-driver

அமீரக வாழ் பொதுமக்கள் மற்றும் குடிமக்கள் ஆகியோர் நாட்டின் சட்டதிட்டங்களை அறிந்து அதன்படி நடந்திடவும் குற்றங்களைக் குறைக்கும் நோக்கிலும் அமீரக பொதுவழக்குத்துறை அமீரக சட்ட திட்டங்களைக் குறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்களைப் பரப்பி வருகிறது.

அதன் நீட்சியாக, அமீரகத்தில் செல்லுபடியாகும் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் யாரும் எந்த வாகனங்களையும் இயக்குதல் கூடாது என பொதுவழக்குத்துறை எச்சரித்துள்ளது.

போக்குவரத்துக்கான பெடரல் சட்ட எண் 21 (1995) பிரிவு 51-ன் படி தகுந்த ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குபவர்களுக்கு 50,000 திர்ஹம்ஸ் வரையில் அபராதம் விதிக்கப்படும் மற்றும்/அல்லது 3 மாதம் வரையில் சிறைத்தண்டனையும் அளிக்கப்படும்.

குறிப்பிட்ட வகையான வாகனத்திற்கு ஓட்டுனர் உரிமம் பெற்றுவிட்டு அதன்மூலம் வேறு வகையான வாகனங்களை இயக்குபவர்களுகும் இத்தகைய தண்டனைகள் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, லைசன்ஸ் இருந்தால் மட்டும் வாகனத்தில் கை வையுங்கள் மக்களே..

Car-driver
1 Share
Share via
Copy link
Powered by Social Snap