UAE Tamil Web

கலப்பட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளை விற்றால் 2 லட்சம் திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் – அமீரக அரசு எச்சரிக்கை..!

Dhirhams

கலப்பட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்தால் 2 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என அமீரக பொது வழக்குத்துறை நினைவுபடுத்தியுள்ளது. நேற்று ட்விட்டர் மூலமாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது அந்த அமைப்பு.

“2015 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட பெடரல் சட்ட எண் 10 ல் குறிப்பிட்டுள்ள ஆர்டிகிள் 14 (1) ன் படி, மற்றொரு சட்டத்தில் பரிந்துரைக்கப்படக்கூடிய அதிக அபராதத்திற்கு பாரபட்சம் இல்லாமல், கெட்டுப்போன, கலப்பட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களை விற்போருக்கு 3 மாத சிறைத்தண்டனை மற்றும்/அல்லது 1 லட்சம் முதல் 2 லட்சம் திர்ஹம்ஸ் வரையில் அபராதமானது விதிக்கப்படும்” என பொதுவழக்குத்துறையின் ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கலப்பட, உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் சமூக பாதுகாப்பு, அமைதி, சட்டத்தின் வழியிலான வாழ்க்கை ஆகியவற்றை மேம்படுத்தவும் இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொது வழக்குத்துறை தெரிவித்துள்ளது.

Dhirhams
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap