UAE Tamil Web

நிம்மதி…மசூதிகளுக்கான கொரோனா விதிமுறைகளை புதுப்பித்த அமீரக அரசு..!

MOSQUE

அமீரகத்தில் மசூதிகளுக்கான புதுப்பிக்கப்பட்ட கொரோனா விதிமுறைகளை அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, பெண்களுக்கான தொழுகை மையங்கள், ஒலு செய்யும் இடங்கள் மற்றும் கழிவறைகள் ஆகியவற்றை மீண்டும் திறக்க அரசு அனுமதியளித்துள்ளது.

கொரோனா காரணமாக மூடப்பட்ட மசூதிகளை கடந்த ஜூலை மாதம் மீண்டும் திறக்க அரசு அனுமதியளித்தது. இருப்பினும் பெண்களுக்கான தொழுகை மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருந்த நிலையில் கடந்த வாரம் ஷார்ஜாவில் பெண்களுக்கான தொழுகை மையங்கள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • புதிய விதிமுறைகளின்படி, ஒலு செய்யும் இடங்கள் மற்றும் கழிவறைகள் ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் சுத்திகரிப்பு செய்யவேண்டும்.
  • தொழுகையாளர்கள் 1.5 மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடித்தல் வேண்டும்.
  • கொரோனா விழிப்புணர்வு குறித்த ஆங்கிலம், உருது மற்றும் அரபியில் அச்சிடப்பட்ட விளக்கக் குறிப்புகள் மசூதியில் இருத்தல் வேண்டும்.

இதுகுறித்துப் பேசிய தேசிய அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டாக்டர்.சைஃப் அல் தஹேரி,” ஒவ்வொரு தொழுகை முடிந்த பின்னரும் கண்டிப்பாக மசூதி மூடப்பப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்றார்.

இமாம்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்திருத்தல் வேண்டும் மேலும் ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறை PCR டெஸ்ட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

MOSQUE
3 Shares
Share via
Copy link