UAE Tamil Web

புதிய வகை கொரோனா குறித்து மக்கள் யாரும் கவலையடைய வேண்டாம் – அமீரக அரசு தகவல்..!

Stock-covid-testing-DPI

அமீரக அரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளரான டாக்டர். ஓமர் அப்துல் ரஹ்மான் அல் ஹம்மாடி ஐரோப்பாவில் பரவத் துவங்கிய புதியவகை கொரோனா வைரஸ் குறித்து நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

- Advertisment -

அப்போது, புதிய கொரோனா வைரஸ் குறித்து மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம். தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள் என ஹம்மாடி தெரிவித்தார்.

மேலும், “அமீரகத்தில் அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களுக்கு வேண்டிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை நமது சுகாதாரத்துறை திறம்பட வழங்கிவருகிறது. வெளிநாடுகளில் இருந்து அமீரகம் வருவோர் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்லுதல் போன்ற விதிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றவேண்டும்” என்றார்.

வைரஸ்கள் அனைத்திற்குமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவற்றின் ஜீன்களில் மாற்றம் ஏற்படும். இது இயற்கைதான். நமது தடுப்பு மருந்துகள் நம்மைக் காக்குமா? என்பது குறித்து மக்கள் பயப்படத்தேவையில்லை என ஹம்மாடி விளக்கினார்.