UAE Tamil Web

நாம் கொரோனா பாதிப்பிலிருந்து வெளியேறிவிட்டோம்; கடவுளுக்கு நன்றி – அபுதாபி இளவரசர் வெளியிட்ட வீடியோ..!

sheikh

அமீரகத்தில் கடந்த 3 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 200 க்கும் கீழே பதிவாகியிருக்கிறது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் அலுவலகங்களுக்குச் செல்லத் துவங்கிவிட்டனர். விடுமுறை கொண்டாட்டத்தில் மீண்டும் மக்கள் திளைக்கத் தயாராகிவிட்டனர். இதற்கெல்லாம் ஒரே அர்த்தம் தான். அமீரகம் கொரோனா பாதிப்பிலிருந்து வெளியேறியிருக்கிறது என்பதுதான் அது.

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் இளவரசர்,” நாம் கொரோனா பாதிப்பிலிருந்து வெளியேறிவிட்டோம்; இந்த கொடுங்காலம் நமக்கு உணர்த்தியதை பாடமாகப் பெற்றிருக்கிறோம். கடவுளுக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

sheikh
4 Shares
Share via
Copy link