UAE Tamil Web

“ஓவரா யூஸ் பண்றீங்க” – அமீரகத்தில்அதிகரிக்கும் VPN டவுன்லோடு – எச்சரிக்கும் அமீரக அரசு..!

VPN

அமெரிக்காவைச் சேர்ந்த அட்லஸ் தரவு பகுப்பாய்வு நிறுவனம் உலகம் முழுவதிலும் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க் (virtual private networks) -ற்கு இருக்கும் டிமாண்டுகளை ஆராய்ந்து கட்டுரை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில் 2020 ஆம் ஆண்டைக் காட்டிலும் அமீரகத்தில் 2021 ஆம் ஆண்டு VPN டவுன்லோடு செய்யும் நபர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் முதற் பாதியில் அமீரகத்தில் 3.9 மில்லியன் VPN டவுன்லோடு நடைபெற்றிருக்கிறது. வளைகுடா நாடுகள் என எடுத்துக்கொண்டால் கத்தாரில் VPN டவுன்லோடு அந்நாட்டு மக்கட்தொகையில் 44.47 சதவீதமாக இருக்கிறது. அமீரகத்தில் இது 39.91 சதவீதமாகவும் இந்தியாவில் 24.79 சதவீதமாகவும் இருக்கிறது.

2020 ஆம் ஆண்டைப் பொறுத்தவரையில் அமீரக மக்கட்தொகையுடன் ஒப்பிடுகையில் VPN ஆப் டவுன்லோடு 61.61 சதவீதமாக இருந்தது. அதாவது 60 லட்சம் முறை VPN ஆப் அமீரகத்தில் டவுன்லோடு செய்யப்பட்டிருந்தது. இது உலகளவில் முதலிடமாகும்.

இதுகுறித்து அட்லஸ் வெளியிட்ட அறிவிப்பில்,” இதே நிலை தொடர்ந்தால் இந்தாண்டு இறுதிக்குள் அமீரக வரலாற்றில் VPN செயல்பாடு புதிய உச்சமாக 40 சதவீதத்தை அடையும். மொத்தம் 80 லட்சம் டவுன்லோடுகள் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். இது 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 லட்சம் அதிகமாகும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் VPN ஆப்பை தவறான காரியத்திற்கு பயன்படுத்துவது அமீரகத்தில் மோசமான குற்றமாக பார்க்கப்படுகிறது. அமீரகத்தில் தவறான ஐபி முகவரியைப் பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு சிறைத்தண்டனை அல்லது 50,000 முதல் 20 லட்சம் திர்ஹம்ஸ் வரையில் அபராதம் விதிக்கப்படும்.

சமீபத்தில் இதுகுறித்து பொது வழக்குத்துறை வெளியிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், கணினி நெட்வொர்க்கில் ஒவ்வொரு சாதனத்திற்கும் ஒரு ஐபி முகவரி (IP – Internet Protocol) கொடுக்கப்பட்டிருக்கும். தகவல் பரிமாற்றத்திற்காக இவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. சைபர் குற்றங்களுக்கு எதிரான (மற்றும் அதன் திருத்தங்கள்) அமீரக பெடரல் சட்டம் எண் 5 (2012) ன் 9 வது ஆர்டிகிளின்படி தவறான ஐபி முகவரியை உபயோகிப்பது அல்லது மூன்றாம் தரப்பு முகவரியை (third-party) உபயோகிப்பது அல்லது இதுபோன்ற வேறு வழிமுறைகளைப் பின்பற்றி குற்றச்செயல்களில் ஈடுபடுவது அல்லது அதனை மறைப்பது ஆகியவை குற்றமாகும்.

மேற்கண்ட சட்டத்தின்படி இக்குற்றத்திற்கு சிறைத்தண்டனை அல்லது 50,000 முதல் 20 லட்சம் திர்ஹம்ஸ் வரையில் அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டுமே (சிறைத்தண்டனை மற்றும் அபராதம்) விதிக்கப்படும்.

முன்னர் 2012  ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி அபராதத்தொகை குறைவாக இருந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி தொகையானது அதிகரிக்கப்பட்டது. ஆன்லைன் சூதாட்டம் போன்ற குற்றங்களை VPN உதவியுடன் செய்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என பொது வழக்குத்துறை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது.

 

VPN
4 Shares
Share via
Copy link