UAE Tamil Web

50 பணியிடங்கள்; 6000 திர்ஹம்ஸ் சம்பளம் – விருப்பமுள்ளவர்கள் நேர்முகத்தேர்விற்கு செல்லலாம் – விபரம் உள்ளே..!

job 2

கிரெடிட் கார்டு சேல்ஸ் மேனேஜர் மற்றும் பெர்சனல் லோன் அதிகாரிகளுக்கான நேர்முகத்தேர்வு துபாயில் நடைபெற்று வருகிறது. மொத்தமாக 50 பணியிடங்களுக்கு இந்த நேர்காணல் நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு மாதம் 6000 திர்ஹம்ஸ் ஊதியமும் அதுமட்டுமல்லாமல் இன்செண்டிவ்ஸ் போன்ற பல சலுகைகளும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று துவங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த நேர்காணலில் குறைந்தபட்சம் இரண்டு வருட அனுபவமுள்ள ஆண் / பெண் என இருபாலரும் பங்கேற்கலாம். விண்ணப்பதாரர்கள் பேச்சுத் திறமை மற்றும் தனிப்பட்ட ஆளுமைத்திறனில் சிறந்து விளங்குபவராக இருத்தல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ளவர்கள் தங்களது CV யுடன் நேரில் வரலாம். ஒருவேளை தேர்வானால் உடனடியாக பணியில் இணைய சம்மதம் அளிக்கவேண்டும் என விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விண்ணப்பதாரர் கண்டிப்பாக விசிட் விசா அல்லது மாற்றிக்கொள்ளத் தக்க வகையிலான விசாவை வைத்திருத்தல் வேண்டும். தேர்ச்சி பெறுபவர்கள் அமீரக தொழிலாளர் சட்டத்தின்படி, ஊதியம் பெறுவதுடன் கவர்ச்சிகரமான இன்செண்டிவ்ஸ் மற்றும் பல சலுகைகளையும் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறமையும், அனுபவமும் உள்ள நபர்களுக்கு கூடுதல் ஊதியம் வழங்கவும் நிறுவனம் இசைவு தெரிவித்துள்ளது. நேர்காணல் இன்று துவங்கி தொடர்ந்து மூன்று நாட்கள் காலை 10 மணிமுதல் மதியம் 12 மணிவரையில் நடைபெற இருக்கிறது.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி

அல் மசாவூத் டவர் 2 (Al Masaood Tower 2),

அலுவலக எண் 302 (office No. 302),

போர்ட் சயீத் (Port Saeed),

தேரா (Deira),

துபாய் (Dubai).

job 2
0 Shares
Share via
Copy link