கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தவறான தகவல்களை அல்லது வதந்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமீரக அதிகாரிகள் குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளனர்.
அமீரக அரசு கொரோனா பரவலை தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிரடியாக எடுத்து வருகிறது. இந்நிலையில் அரசு மேற்கொள்ளும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பாடல் வரிகள் மூலமாகவும், கருத்துக்கள் மூலமாகவும் சமூக ஊடகங்களில் காணொளி மற்றும் ஆடியோ மூலம் சிலர் கேலி செய்து வருகின்றனர்.
இந்த பதிவுகளில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் இணங்க வேண்டாம் என்று அழைப்புவிடுப்பதோடு மட்டுமல்லாமல், அரசு எடுக்கும் முயற்சிகளை கேலி செய்வதாக, ஃபெடரல் எமர்ஜென்சி, நெருக்கடி மற்றும் பேரிடர் ஆணையம் உறுதி செய்துள்ளது.
திறமையான அதிகாரிகளால் எடுக்கப்பட்டு வரும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த தவறான செய்திகள், தகவல்கள் அல்லது வதந்திகளை வெளியிடுவது அல்லது பகிர்வது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது.
கொரோனா நோய் பரவுவதை தடுக்கும் விதத்தில் அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு எதிராக வதந்தி பரப்புவோர்கள் மீது 2021 ஆம் ஆண்டின் ஆணை சட்டம் எண். 34 கீழ் பரிந்துரைக்கப்பட்ட நிர்வாக அல்லது அபராத தண்டனைகளுக்குள்ளாவார்கள் என்றும், அவர்களை குற்றவாளிகளாக அரசு அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 200,000 திரஹம்ஸ் அபராதம் விதிக்கப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொறுப்புடன் அரசுக்கு ஒத்துழைப்பு தருவதோடு மட்டுமல்லாமல், இது தொடர்பான எந்த செய்தியை பகிரும் போதும், கவனமாகவும் செயல்பட வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
Federal Emergency Crisis and Disasters Prosecution warns against flouting #COVID19 precautionary measures#WamNews https://t.co/so75m7AmRu pic.twitter.com/cGTXntGliw
— WAM English (@WAMNEWS_ENG) January 10, 2022
