UAE Tamil Web

இப்படியெல்லாம் கூட நீங்கள் ஏமாற்றப்படலாம் – எச்சரிக்கும் அமீரக காவல்துறை..!

Dubai Police

அபுதாபி: வீட்டு வேலைகளை மிகக்குறைந்த செலவில் மேற்கொள்வதாக சில திருட்டுக் கும்பல் கிளம்பியிருக்கிறது. ஆன்லைனில் போலியான போன் நம்பரைக் கொடுத்து ஏமாற்றும் இத்தகைய நூதன திருடர்களிடம் இருந்து விலகியே இருங்கள் என அபுதாபி காவல்துறை எச்சரித்துள்ளது.

பிரபல நிறுவனங்களின் பெயரில் சமூக வலைத்தள கணக்கு ஒன்றினைத் துவங்கி, வீட்டு வேலைகளை மிகக்குறைந்த கட்டணத்தில் செய்துதருவதாக வலைவிரிப்பார்கள் இந்த மோசடி மன்னர்கள்.

மலிவான கட்டணம் என நினைத்து நீங்கள் பணம் செலுத்தினால், உங்களுக்கு சேவையும் கிடைக்காது நீங்கள் செலுத்திய பணமும் திரும்பக் கிடைக்காது. ஆகவே, அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் மூலமாகவே வீட்டு வேலைகளை மேற்கொள்ளுங்கள் என மக்களை அபுதாபி காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுமட்டுமல்லாமல் இதுபோன்ற பல்வேறு வழிகளில் இவர்கள் பணம் பறிக்க திட்டமிடுகிறார்கள் எனவும் பொதுமக்கள் கவனமாக செயல்படவேண்டும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.