இன்று அதிகாலை 2 மணிமுதல் 9.30 மணிவரையிலும் அமீரகத்தில் பனிமூட்டம் ஏற்படலாம் எனவும் வாகனவோட்டிகள் கவனத்துடன் செயல்படுமாறும் தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்திருக்கிறது.
குறிப்பாக நாட்டின் உட்பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளின் பிற்பகுதியில் வானிலை சூரிய ஒளி மிகுந்து காணப்படும் எனவும் நாட்டின் உட்பகுதியில் வெப்பநிலையானது அதிகபட்சமாக 31 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு மற்றும் நாளை காலை வேளைகளில் ஈரப்பதம் மிகுந்து காணப்படும் என NCM தெரிவித்திருக்கிறது.
— المركز الوطني للأرصاد (@NCMS_media) December 1, 2020
தெற்கிலிருந்து கிழக்காகவும் பின்னர் வடக்கிலிருந்து மேற்காகவும் லேசானது முதல் மிதமானது வரையில் காற்றுவீசக்கூடும். காற்றானது மணிக்கு 15 முதல் 25 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம். அதிகபட்சமாக காற்றின் வேகம் மணிக்கு 35 கிலோமீட்டர் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடலில் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றம் இருக்கும் என NCM தெரிவித்திருக்கிறது.