UAE Tamil Web

வீடியோ: அமீரகத்தில் தட்டி வீசிய மழை : மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வுமையம்..!

rain

அமீரகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்று காலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அபுதாபி, ஷார்ஜா, துபாய், ராஸ் அல் கைமா, அல் அய்ன் ஆகிய மகுதிகளில் மேக விதைப்பு காரணமாக இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை காலை 10.30 மணிவரையில் சில இடங்களில் கனமழை காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மழை காரணமாக வெப்பநிலை குறையும் எனவும் வானம் மேகமூட்டமாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நேரங்களில் காற்று கடுமையாக வீசும். புழுதிக் காற்று வீச வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

rain
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap