UAE Tamil Web

வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட பனிமூட்ட எச்சரிக்கை: வாகனவோட்டிகளே உஷார்..!

foggy

இன்று காலை அமீரகத்தில் பனிமூட்டம் ஏற்படுவதால் வாகனவோட்டிகள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கவனமாக பின்பற்றுமாறு தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

உள் மற்றும் கடலோரப்பகுதிகளில் குறிப்பாக மேற்குப் பகுதிகளில் காலை 2 மணிமுதல் 9 மணிவரையில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சாலைகள் சரிவரத் தெரியாது என NCM தெரிவித்திருக்கிறது.

இன்றைய நாளின் பிற்பகுதியில் வானிலை சீராகவும் நாட்டின் கிழக்குப் பகுதியில் பகுதி மேகமூட்டமாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக நாட்டின் உட்பகுதிகளில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக இருக்கும். அதேபோல உள் மற்றும் கடலோரப்பகுதிகளில் பனிமூட்டம் இருக்கும் எனவும் இன்று இரவு மற்றும் நாளை காலை காற்றில் ஈரப்பதம் மிகுந்து காணப்படும் என NCM தெரிவித்திருக்கிறது.

லேசானது முதல் மிதமானது வரையில் காற்று வீசக்கூடும். அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடல் லேசான சீற்றத்துடன் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.