அமீரகத்தில் நேற்று இரவு 11 மணிமுதல் இன்று காலை 10 மணி வரையிலும் கடுமையான பனிமூட்டம் ஏற்படும் என தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்திருக்கிறது.
— المركز الوطني للأرصاد (@NCMS_media) December 3, 2020
இதனையடுத்து அபுதாபி காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” பனிப்புகை காரணமாக சாலைகள் கண்ணுக்குப் புலப்படுவதில் சிரமம் ஏற்படலாம். ஆகவே எலெக்ட்ரானிக் தகவல் பலகைகளில் திரையிடப்படும் வேக அளவுகளை வாகனவோட்டிகள் பின்பற்றி பாதுகாப்பாக வாகனங்களை இயக்கவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#urgent | #AbuDhabiPolice
call on motorists to exercise caution due to reduced visibility during the #fog. They are urged to follow changing speed limits displayed on electronic information boards.
Drive Safely— شرطة أبوظبي (@ADPoliceHQ) December 3, 2020
இன்றைய நாளின் பிற்பகுதியில் வானம் சூரிய ஒளி மிகுந்து காணப்படும் எனவும், நாட்டின் உட்பகுதியில் வெப்பநிலை அதிகபட்சமாக 31 டிகிரி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை வேளைகளில் ஈரப்பதம் மிகுந்து காணப்படும். நாட்டின் உட்பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் பனிப்புகை தோன்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேசானது முதல் மிதமானது வரையில் கடலிலிருந்து காற்று வீசலாம்.
அரேபிய வளைகுடா பகுதிகளில் மிதமான சீற்றம் இருக்கும் எனவும் ஓமான் கடலைப் பொறுத்தவரையில் லேசானது முதல் மிதமானது வரையில் காற்று வீசக்கூடும் என NCM அறிவித்திருக்கிறது.