UAE Tamil Web

முக்கியச் செய்தி: இன்று இரவு அமீரகத்தைச் சூழும் புழுதிப்புயல் – மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வுமையம் – உஷார் மக்களே..!

sand storm

இன்று இரவு புழுதிப் புயல் வீசும் என வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்திருப்பதால் வாகனவோட்டிகள் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

- Advertisment -

புயல் வீசுகையில் அதனை வீடியோ எடுத்துக்கொண்டு நிற்காமல் பத்திரமாய் வீட்டிற்குச் செல்லும்படி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் புழுதிக் காற்று வீசும் என்பதால் வானிலை ஆய்வுமையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பிட்ட சில இடங்களில் மதியம் 2.45 மணிமுதல் இரவு 8 மணிவரையில் புழுதிப்புயல் வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூசுக்காற்றால் 2,000 மீட்டருக்குள் மட்டுமே மக்களால் பார்க்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.