UAE Tamil Web

வாட்ட இருக்கும் வெயில்; மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் தூசுக் காற்று – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

dust wind

அமீரகத்தில் இன்றும் நாளையும் அதிக வெப்பநிலையும் கடுங்காற்றும் வீசும் என தேசிய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரையில் தூசுக்காற்று வீசலாம் எனவும் வடமேற்குத் திசையிலிருந்து நல்ல காற்று வீசும் ; சில நேரங்களில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மேற்குப்புறத்தில் இந்த அதிவேக காற்றினால் தூசு மற்றும் மணற்காற்று வீசும். இதனால் 2000 மீட்டருக்கு அப்பால் உள்ளவற்றை பார்க்கமுடியாமல் போகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக அல் அய்னில் உள்ள ரக்னாவில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு 23.1°C பதிவாகியிருக்கிறது. சனிக்கிழமைகளில் வெப்பம் உயர்ந்து காணப்படும். நாட்டின் உட்புறப் பகுதிகளில் அதிகபட்சமாக 46 டிகிரி வெப்பம் கொளுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். கடற்கரை மற்றும் நாட்டின் உட்பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பனிமூட்டம் உண்டாவதற்கு வாய்ப்பிருக்கிறது.

இன்று அரேபியன் வளைகுடாவில் கடலானது கடுமையான முதல் மிதமான சீற்றத்துடன் காணப்படும் அதேபோல ஓமான் கடலில் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றம் இருக்கலாம். சனிக்கிழமை இரு கடல்களிலும் மிதமான சீற்றம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

dust wind
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap