அமீரகத்தில் குளிர்காலம் தொடங்கியதை அடுத்து, மோசமான வானிலை நிலவி வருகிறது. குளிர் வாட்ட துவங்கி இருக்கும் நிலையில் துபாய் காவல்துறை பொதுமக்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறது.
வளைகுடா நாடுகள் பெரும்பாலானவைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனுடையே குளிரும் வாட்டி வருகிறது. இதை பொதுமக்கள் ரசித்து தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் ஸ்டேட்டஸாக தட்டி வருகின்றனர். ஆனால் இனி வரும் நாட்களில் குளிர் ரசிக்கும்படி இருக்காது. ரொம்பவே கடுமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து மழை பெய்யாமல் இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் மூடுபனியாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. அமீரகத்தின் எமிரேட்ஸ் வானியல் சங்கம், பாலைவனங்களில் வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாகவும், மலைப்பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
National Centre of Meterology (NCM) கூற்றுப்படி, அமீரகத்தில் வானிலை சீராக இல்லை. எப்போது என்ன வேண்டும் என்றாலும் வரலாம் என்றனர். அபுதாபியில் 24°C ஆகவும், துபாயில் 23°C ஆகவும் வெப்பநிலை பதிவாகும். அமீரகம் முறையே 15 டிகிரி செல்சியஸ் மற்றும் 16 டிகிரி செல்சியஸ் வரை குறைவான வெப்பநிலையைக் காணும் என்றும் தெரிவித்துள்ளது.
லேசானது முதல் மிதமான காற்று வீசுவதால் தூசி வீசுப்படும். அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக காணப்படும்.
உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) கூறுகையில் தற்போதைய வானிலை ஏற்ற இறக்கத்துடனே காணப்படுகிறது. இதன் விளைவாக எழக்கூடிய எந்தவொரு அவசரநிலையையும் எதிர்கொள்ள அமீரகம் தயார்நிலையில் இருப்பதாக அறிவித்தது.
அமைச்சகம் மற்றும் NCM மோசமான வானிலையின் போது பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டு இருக்கும் கட்டுப்பாடுகள்:
* வானிலை மையம் கொடுத்து இருக்கும் முன்னறிவிப்புகளைப் பின்பற்ற வேண்டும். * அதிகாரிகள் தரப்பில் கொடுக்கப்படும் கட்டுப்பாடுகளையும் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும்.
* கடும் அவசரம் இருந்தால் மட்டுமே எச்சரிக்கையுடன் வாகனத்தினை ஓட்டுங்கள். தேவையில்லாமல் வாகனத்தினை எடுத்துக்கொண்டு சாலைக்கே வர வேண்டாம். * * மேலும் சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய எப்போதுமே விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருங்கள்.
* Visibility குறையும் போது லோ-பீம் ஹெட்லைட்களை ஆன் செய்யவும்.