அமீரகத்தில் இன்று பரவலாக மழை பொழியும் எனவும், வானம் மேகமூட்டமாக இருப்பதுடன் குளுமையான சூழல் நிலவும் என தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்திருக்கிறது.
கடலோர மற்றும் வடக்குப் பகுதிகளில் மழை பொழிய வாய்ப்பு இருப்பதாகவும் வானம் பகுதி மேகமூட்டமாவும் சில நேரங்களில் மேகமூட்டமகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fresh Northwesterly winds with a speed reaching 45 km/h and rough sea with wave height reaching 4 – 6 / 7 Ft in the offshore areas of the Arabian Gulf from 03:00 Sunday 20/12/2020 until 03:00 Monday 21/12/2020. pic.twitter.com/cKsB4RhPag
— المركز الوطني للأرصاد (@NCMS_media) December 19, 2020
கடற்பகுதியில் வடகிழக்கிலிருந்து வட மேற்காக காற்று வீசும். அரேபிய வளைகுடாவில் சீற்றம் மிகுந்து காணப்படும். இதனால் அலைகள் 7 அடிவரை எழும். ஓமான் கடலைப் பொறுத்தவரையில் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 4.30 மணிமுதல் 8.30 மணி வரையில் பனிமூட்டம் ஏற்படும் என வானிலை ஆய்வுமையம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
A chance of fog formation with deterioration of horizontal visibility over some internal and central areas especially from 04:30 utill 08:30 Sunday 20/12/2020 pic.twitter.com/l9qZLW3MJw
— المركز الوطني للأرصاد (@NCMS_media) December 20, 2020