UAE Tamil Web

அமீரகம்: குளிர், காற்று, மழைக்கான இன்றைய வானிலை முன்னறிவிப்பை வெளியிட்ட NCM

rain

ஞாயிற்றுக்கிழமையான இன்று அமீரகத்தில் குளிர்ந்த வானிலை நிலவும் மேலும் நாட்டின் சில கடலோர பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தகவல் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை முன்னறிவிப்புப்படி தீவுகள் மற்றும் சில கடலோரப் பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படும் குறிப்பாக மேற்கு நோக்கிய பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வடமேற்கில் லேசானது முதல் மிதமான காற்று வீசும் இது மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும் எனவும் குறிப்பிடப்பிட்டுள்ளது.

குறைந்தபட்ச வெப்ப நிலை 7 ° C -ஆகவும், அதிகபட்சம் 29 ° C-ஆகவும் இருக்கும். அரேபிய வளைகுடாவில் மேற்கு நோக்கியும், ஓமான் கடலில் சிறிது மிதமானதாகவும் காற்று இருக்கும். அரேபிய வளைகுடாவில் அதிகாலை முதல் 9:30 மணி வரை கடல் அலைகள் 6 அடி வரை உயரே எழும்ப கூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain
0 Shares
Share via
Copy link