UAE Tamil Web

அமீரகத்தில் புழுதிப் புயல் – வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை!

அமீரகத்தில் பலத்த காற்று மற்றும் புழுதிப் புயல் வீசுவதால் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை சுமார் 18 செல்சியஸ் வரை குறைந்தது. காற்றின் வேகம் அதிகரித்ததால், தூசி பறந்தது.மூடுபனி மற்றும் தூசி காரணமாக சாலையே தெரியாத நிலை இருந்தது.

தட்ப வெப்பநிலை குறைவாக இருந்தபோதிலும்,வழக்கம் போல் சாலைகள் பரபரப்பாக இருந்தது. புழுதிப்புயலின் காரணமாக வாகன ஓட்டிகள் கவனமாக சாலையில் செல்ல வேண்டும்.

பலத்த காற்றினால் சில மரங்கள் முறிந்து விழுந்ததுடன், குப்பைகளும் பறந்தன.

மேகமூட்டமான வானத்தில் சூரியன் எட்டிப்பார்த்ததாலும், காற்று மற்றும் தூசியால் நகரமே பார்ப்பதற்கு அழகான காட்சியாக இருந்தது.

வெள்ளியன்று குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் புர்ஜ் கலீஃபாவிற்கு வருகை தருவது வழக்கம். அமீரகம் முழுவதும் காற்றின் காரணமாக தூசி பறப்பதால், புர்ஜ் கலீஃபாவை ரசிக்க முடியவில்லை.மேகமூட்டத்துடன், இடியுடன் கூடிய மழையில்,  சைக்கிள் ஓட்டுபவர் பலத்த காற்றுடன் போராடுகிறார்.

அமீரகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் ஆகிய இரண்டிலும் காற்றின் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.நகரின் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

அமீரகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை சனிக்கிழமை இரவு மற்றும் அதிகாலையில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap