UAE Tamil Web

முக்கியச் செய்தி: புழுதிக் காற்று மற்றும் மழைக்கு வாய்ப்பு – எச்சரிக்கும் காவல்துறை..!

UAE Weather

அமீரகத்தின் கடலோரப்பகுதிகள், வடக்கு மற்றும் உள்நாட்டுப் பகுதிகளில் வானமானது சில நேரங்களில் பகுதி மேகமூட்டமாகவும், சில நேரங்களில் மேகமூட்டமாகவும் இருக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

இன்று அமீரகத்தின் பெரும்பாலான இடங்களில் புழுதிப் படலம் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வெப்பநிலை குறைந்து சில இடங்களில் மழை பொழியலாம் என NCM தெரிவித்திருக்கிறது.

இந்த வானிலை காரணமாக அபுதாபி காவல்துறை வாகனவோட்டிகளை கவனமாக வாகனங்களை இயக்குமாறு எச்சரித்துள்ளது.

அதிகபட்சமாக நாட்டின் வெப்பநிலை உட்பகுதிகளில் 29 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதமானது முதல் சில நேரங்களில் காற்று கடும் வேகத்தில் வீசக்கூடும் எனவும் இக்காற்று மணல், தூசுப் படலம் உருவாக வழிவகுக்கும் என NCM தெரிவித்திருக்கிறது.

அரேபிய வளைகுடாவில் கடலானது இன்று நள்ளிரவு முதல் நாளை காலை வரை மிதமானது முதல் கடுமையான சீற்றத்துடன் இருக்கும் எனவும் ஓமான் கடல் பகுதி மிதமான சீற்றத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.