அபுதாபியில் இன்று கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. நேற்று இரவு முதல் இன்று காலை 11 மணிவரையில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும் என தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது.
இதனால் சாலைகள் கண்ணுக்குப் புலப்படுவதில் சிரமம் ஏற்படலாம் என்பதால் வாகனவோட்டிகள் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்குமாறு அபுதாபி காவல்துறை தனது சமூக வலைத்தளப் பக்கங்கள் மூலமாக அறிவுறுத்தி இருக்கிறது.
#Alert #Fog_Alert #NCM pic.twitter.com/LVS9dCPtkW
— المركز الوطني للأرصاد (@NCMS_media) February 19, 2021
குறிப்பாக அபுதாபி – துபாய் சாலை, செய்ஹ் அல் செதிரா – கிஸாத் சாலை, அபுதாபி – அல் அய்ன் சாலை, அபுதாபி – ஸ்வேய்ஹான் மற்றும் ட்ரக் சாலை ஆகிய சாலைகளுக்கு வேகக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, டிரைவர்கள் வேறு லேன்களுக்கு மாறுதல் மற்றும் முன்னால் செல்லும் காரை முந்திச் செல்லுதல் ஆகியவற்றின் காரணமாக விபத்து நேராமல் கவனமாக வாகனங்களை இயக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
#عاجل | #تنويه #ضباب
تم تفعيل منظومة خفض السرعات إلى 80 كم/س على طريق الشيخ محمد بن راشد (أبوظبي – دبي)#Urgent | #Warning #Fog
Speed reduction system activated to 80 Km/h on mohammed Bin Rashid road (Abu Dhabi – Dubai)— شرطة أبوظبي (@ADPoliceHQ) February 20, 2021
நாட்டின் கிழக்குப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வானம் பகுதி முதல் முழு மேகமூட்டமாக காணப்படும் எனவும் சில இடங்களில் லேசான மழைப்பொழிவு இருக்கும் எனவும் தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது.
#عاجل | #تنويه #ضباب
تم تفعيل منظومة خفض السرعات إلى 80 كم/س على طريق الشيخ محمد بن راشد (أبوظبي – دبي)#Urgent | #Warning #Fog
Speed reduction system activated to 80 Km/h on mohammed Bin Rashid road (Abu Dhabi – Dubai)— شرطة أبوظبي (@ADPoliceHQ) February 20, 2021
கடற்கரைப் பகுதிகளில் வெப்பநிலை 23°C – 28°C ஆகவும், நாட்டின் உட்பகுதிகளில் வெப்பநிலையானது 23°C – 28°C ஆகவும் இருக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக வட – கிழக்குக் காற்று வீசலாம். நாட்டின் உட்பகுதிகளில் இது சில நேரங்களில் தூசுக்காற்றாக இருக்கும். இதனால் சாலைகள் கண்ணுக்குப் புலப்படுவதில் சிரமம் ஏற்படலாம்.
அரேபிய வளைகுடா சீற்றத்துடனும் ஓமான் கடல் பகுதி லேசான சீற்றத்துடன் காணப்படும்.
A chance of rainy clouds formation over some Western areas from 06:15 to 10:00 Saturday 20/02/2021 pic.twitter.com/HIcjJu1NUd
— المركز الوطني للأرصاد (@NCMS_media) February 20, 2021