UAE Tamil Web

வானிலை: குறையும் வெப்பநிலை – “இந்த இடங்களில்” மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

rain uae

அமீரகத்தில் இன்று இதமான வானிலை நிலவும் எனவும் அல் அய்ன் மற்றும் புஜைராவில் இன்று மழை பொழிய வாய்ப்புகள் இருப்பதாகவும் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

நாட்டின் உட்பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 14-19°C ஆக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு மற்றும் நாளை காலை பனிப்புகை ஏற்பட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தென் கிழக்கு முதல் வட கிழக்குப் பகுதியில் லேசானது முதல் மிதமானது வரை காற்று வீசக்கூடும். பொதுவாக 15– 25 km/h வேகத்திலும் அதிகபட்சமாக சில நேரங்களில் 35 km/h வேகத்தில் காற்று வீசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடல் லேசானது முதல் மிதமானது வரை சீற்றமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.