UAE Tamil Web

எச்சரிக்கை: அமீரகத்தில் இன்று 49 டிகிரியில் வெப்பநிலை பதிவாகும்..!

summer

அமீரகத்தில் இன்று நாட்டின் உட்பகுதிகளில் வெப்பநிலை 49 டிகிரி செல்சியசாக இருக்கும் என தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. சில நேரங்களில் தூசுக்காற்று வீசலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமீரகத்தின் உட்பகுதிகள் மற்றும் சில வட பிராந்தியங்களில் இன்று காலை 8 மணிவரையில் பனிமூட்டத்திற்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. ராஸ் அல் கைமா விமான நிலையம், உம் அல் குவைனில் உள்ள ஷேக் முகமது பின் சயீத் சாலை, துபாயின் அவிர், ஷார்ஜாவின் தஃப்ரா மற்றும் அல் சுயோ ஆகிய இடங்களில் இன்று காலை கடும் பனிமூட்டம் இருந்தது.

அமீரகத்தில் இன்று இரவு ஈரப்பதம் 90 சதவீதத்தை தொடும் எனவும் நாளை காலைவரை இந்நிலை நீடிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் சில நேரங்களில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

ஓமான் கடலில் லேசானதும் அரேபியன் வளைகுடாவில் லேசானது முதல் மிதமாகவும் கடல் சீற்றமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summer
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap