அமீரகத்தில் குறிப்பாக நாட்டின் மேற்குப் பகுதிகளில் இன்று வானம் பகுதி மேகமூட்டமாக இருக்கும் என தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்திருக்கிறது.
நாட்டின் உட்பகுதியில் வெப்பநிலை அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
இன்று இரவு மற்றும் நாளை காலை வேளைகளில் ஈரப்பதம் மிகுந்து காணப்படும். சில உட்புறப் பகுதிகளில் பனிமூட்டம் உருவாகலாம்.
லேசானது முதல் மிதமானது வரையில் காற்று வீசக்கூடும்.
அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடல் பகுதியில் கடலானது லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.