UAE Tamil Web

அமீரகத்தில் அரைசதம் (51°C) அடித்த வெப்பநிலை – “இனிமேல் இப்படித்தான்” எச்சரிக்கும் வானிலை ஆய்வுமையம்..!

summer in UAE

இந்த சீசனில் அதிகபட்ச வெப்பநிலையாக நேற்று அல் அய்னில் உள்ள ஸ்வேய்ஹான் பகுதியில் 51°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரும் நாட்களில் இதேபோலவே வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என தேசிய வானிலை ஆய்வுமையம் மக்களை எச்சரித்துள்ளது.

இன்று அபுதாபியில் வெப்பநிலை 49 டிகிரியைத் தொடும் என கணிக்கப்பட்டுள்ளதால் அபுதாபியின் வெளிப்புறச் சாலைகளில் செல்ல வேகக்கட்டுப்பாட்டை விதித்துள்ளது அபுதாபி காவல்துறை.

அபுதாபிக்குச் செல்லும் முக்கியப் பாதைகளில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்திற்கும் குறைவாகவே வாகனங்கள் இயக்கப்படவேண்டும் என காவல்துறை எச்சரித்திருக்கிறது. முகமது பின் ரஷீத் சாலை (அபுதாபி – துபாய்), மக்தூம் பின் ரஷீத் சாலை (அல் சமீஹ் – துபாய்) அபுதாபி – அல் அய்ன் சாலை, அல் ஃபாயா சாலை (ட்ரக் சாலை), அபுதாபி ஸ்வேய்ஹான் சாலை ஆகிய சாலைகளில் பயணிப்பவர்களுக்கு இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

நிலப்பகுதியில் நிலவும் வெப்பம் காரணமாக கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் வெப்பச்சலன மேக மூட்டங்கள் உருவாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் – ஷார்ஜா கடலோரப் பகுதிகளில் இன்றைய வெப்பநிலை 40 – 45 டிகிரி செல்சியசாக இருக்கும். நாட்டின் உட்பகுதிகளில் வெப்பநிலை 44 – 49 டிகிரி செல்சியசாக இருக்கும். மலைப்பகுதிகளில் வெப்பநிலை 32 – 38 டிகிரி செல்சியசாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதீத வெப்பம் காரணமாக கடலோர மற்றும் நாட்டின் உட்பகுதிகளில் ஈரப்பதமானது 95% ஐ எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை மூடுபனி நிலவும். மணிக்கு 10 – 20 கிலோமீட்டர் வேகத்தில் காற்றானது வீசும் எனவும் சில நேரங்களில் இது 30 கிலோமீட்டர் வேகத்தை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summer in UAE
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap