UAE Tamil Web

கொளுத்த இருக்கும் வெயில் – இம்மாதம் முதல் அமீரகத்தில் படிப்படியாக வெயில் அதிகரிக்கும் : வானிலை ஆய்வுமையம் தகவல்..!

lunch break

அமீரகத்தில் வசந்தகாலம் நிலவிவருவதால் வரும் வாரங்களில் நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” வசந்தகாலத்தின் முதல் காலநிலை வேறுபாடு துவங்கும் மாதமாக ஏப்ரல் மாதம் கருதப்படுகிறது. இதன்காரணமாக வளிமண்டல காற்றழுத்ததில் மாறுபாடுகள் ஏற்படலாம். இது காலநிலை மாற்றத்திற்கு வழிவகுக்கும். வட கோளத்தில் சூரிய வெளிச்சம் கடகரேகையில் அதிகளவு விழுவதால் பகல் பொழுது அதிகமாக இருக்கும். அதேபோல மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் வெப்பநிலையானது சராசரியாக  3-5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். ஆனால் மார்ச் மாதத்தைவிட தற்போது குறிப்பாக ஏப்ரல் இரண்டாம் வாரம் ஈரப்பதம் குறையும். முதல் வாரத்தில் பனிமூட்டம் ஏற்படும் வாய்ப்பு அதிகமிருக்கிறது. ஆனால், அடுத்தவாரத்தில் அது குறையும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏப்ரலில் வெளியில் எப்படியிருக்கும்?

சராசரி காற்று வெப்பநிலை 26 – 29. C.

சராசரி அதிகபட்ச காற்று வெப்பநிலை  32 – 36 ° C.

சராசரி குறைந்தபட்ச காற்று வெப்பநிலை  20 – 23. C.

2012 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அல்ருவைஸில் அதிகபட்சமாக 46.9 °C வெப்பநிலை பதிவாகியுள்ளது.

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெபல் ஜெய்சில் குறைந்தபட்சமாக 5 டிகிரி செல்சியஸில் வெப்பநிலை பதிவானது.

lunch break
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap