UAE Tamil Web

அமீரகம்: 47 டிகிரியில் கொளுத்த இருக்கும் வெயில் : உஷார் மக்களே..!

uae summer

அமீரகத்தில் இன்று உட்பகுதிகளில் 47 டிகிரி வெப்பநிலை இருக்கும் என தேசிய வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

தேசிய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, காலையில் கிழக்கு கடற்கரையில் தாழ்வான மேகங்கள் தோன்றும் மற்றும் பிற்பகலுக்குள் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். லேசானது முதல் மிதமான காற்று சில வடக்குப் பகுதிகளில் தூசியுடன் வீசக்கூடும்.

நாட்டில் மிகக் குறைந்த வெப்பநிலையாக அல் புஜைராவின் ஜபல் அல் ஹெபனில் அதிகாலை 3:45 மணிக்கு 21.9 ° C ஆக பதிவாகியிருக்கிறது.

ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதத்தை எட்டும். இன்று இரவு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சில கடலோர மற்றும் உள் பகுதிகளில் மூடுபனி உருவாகும் வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடல் இரண்டிலும் கடல் மிதமான சீற்றத்துடன் இருக்கும்.

uae summer
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap