UAE Tamil Web

வாட்ட இருக்கும் வெயில்; அமீரகத்தில் இன்றைய வெப்பநிலை 48 டிகிரியாக இருக்கும் – கவனம் தேவை மக்களே..!

summer

அமீரகத்தின் உட்பகுதிகளில் இன்று 48 டிகிரி வரையில் வெப்பநிலை நிலவும் என தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

“சனிக்கிழமையன்று ஓரளவு மேகமூட்டமான வானிலை நிலவும், சில பகுதிகளில் பகல் நேரத்தில் மங்கலாக இருக்கும். இன்றிரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஈரப்பதமாக இருக்கும், சில பகுதிகளில் மூடுபனி உருவாகும் வாய்ப்பு உள்ளது” என தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக நாட்டின் கிழக்குப் பகுதியில் மழைமேகங்கள் உருவாகலாம். சில நேரங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் காற்று வீசும். தூசு மற்றும் மணற்காற்று வீசுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடலில் லேசான சீற்றம் இருக்கலாம்.

summer
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap