UAE Tamil Web

அமீரகத்தில் வார இறுதி முதல் அடுத்த வாரம் மழை பெய்யும் – தேசிய வானிலை ஆய்வு மையம்

அமீரகத்தில் வார இறுதியிலும், அடுத்த வாரம் முழுவதும்  மழை பொழியும் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) கணித்துள்ளது.

ஜனவரி 15 முதல் 19 வரை தென்மேற்கில் இருந்து மேற்கு வரை குறைந்த காற்றழுத்தம் நீடிக்கும் என NCM தெரிவித்துள்ளது. ஈரமான கிழக்குக் காற்றும் மேற்கில் இருந்து மேல் காற்றும் வீசி வருகிறது. குளிர்ந்த காற்றழுத்தம் காரணமாக ஏற்பட்ட வெப்பச்சலனத்தால், செங்கடலில் இருந்து மேகங்கள் மழையை பெய்ய செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று வானம்  மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் குறிப்பாக சில கிழக்கு மற்றும் வடக்குப் பகுதிகள், தீவுகள் மற்றும் கடலில், மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முதல் புதன்கிழமை வரை, அமீரகத்தின் சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதே நிலையே கிழக்கு, வடக்கு மற்றும் மேற்குப்பகுதி வரை நீட்டிக்கும் என NCM அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன்கிழமை வெப்பநிலை குறையும் என்பதால் மேகங்கள் படிப்படியாக குறையும். மிதமானது முதல் வலுவான காற்று வீசக் கூடும். வெப்பச்சலனம் காரணமாக பலமான காற்று தூசி மற்றும் மணலை வீசும்.

அரேபிய வளைகுடா மற்றும் ஓமன் கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என NCM தெரிவித்துள்ளது.

12 Shares
Share via
Copy link