UAE Tamil Web

மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்; கடலில் சீற்றம் மிக அதிகமாக இருக்கும் – எச்சரித்த வானிலை ஆய்வுமையம்..!

HIGH Wind

அமீரகத்தின் உட்பகுதிகளில் நாளை ஈரப்பதமும் பனிமூட்டமும் அதிகமாக இருக்கும் என தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்திருக்கிறது.

அமீரகத்தில் நாளை பகுதி மேகமூட்டமாக வானம் இருக்கும் எனவும், தீவுப் பகுதிகள் மற்றும் வடக்குப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக குறிப்பிட்ட சில இடங்களில் மழைப் பொழிவு இருக்கலாம் மேலும் வெப்பநிலை குறையும் என NCM அறிவித்துள்ளது.

அதிவேக காற்று

நாளை அமீரகத்தில் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்றானது வீசக்கூடும். அரேபிய வளைகுடாவில் கடலானது சில நேரங்களில் சீற்றம் மிகுந்து காணப்படும். ஓமான் கடலைப் பொறுத்தவரை மிதமான கடல்சீற்றம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGH Wind
0 Shares
Share via
Copy link