அமீரகத்தில் சனிக்கிழமையான இன்று குறிப்பாக நாட்டின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அமீரக வானிலை தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM), நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்சமாக 33 முதல் 36 ° C வரை வெப்பநிலை இருக்கும், மேலும் குறைந்த வெப்பநிலை 13 முதல் 18 ° C வரை இருக்கும் என்று கூறியுள்ளது. தென்கிழக்கு திசையில் இருந்து வடகிழக்கு நோக்கி லேசானது முதல் மிதமான காற்று வீசக்கூடும் என்றும், சில நேரங்களில் புழுதியுடன் கூடிய காற்றும் இருக்க கூடும் என குறிப்பிட்டுள்ளது.
#المركز_الوطني_للأرصاد#حالة_البحر #الخليج_العربي #بحر_عمان #طقس_اليوم#NCM #Arabian_Gulf #Oman_Sea pic.twitter.com/UOIfj4NgeO
— المركز الوطني للأرصاد (@NCMS_media) November 7, 2020
அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடல் மிதமாக காணப்படும் எனவும் தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. துபாயில் தற்போதைய வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசாக உள்ளது.