UAE Tamil Web

அமீரகத்தில் இன்று இரவு மழை பொழியும் – வானிலை ஆய்வு மையம்..!

rain uae

அமீரகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நாள் முழுவதும் பகுதி மேகமூட்டமாக இருக்கும் என தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) அறிவித்திருக்கிறது.

- Advertisment -

இரவு நேரத்தில் கடல் மற்றும் தீவுப் பகுதிகளில் மேகங்கள் மேலும் ஒன்றிணைந்து மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக NCM தெரிவித்திருக்கிறது.

நாட்டின் உட்பகுதிகளில் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

லேசானது முதல் மிதமானது வரையில் காற்று வீசலாம். சில நேரங்களில் குறிப்பாக இரவில் கடலிலிருந்து காற்று கடுமையாக வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரேபிய வளைகுடாவைப் பொறுத்தவரையில் இன்று நள்ளிரவு மற்றும் நாளை காலை வேளையில் கடல் மிதமானது முதல் கடும் சீற்றமாக இருக்கலாம். ஓமான் கடல் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றம் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.