UAE Tamil Web

அமீரகத்தில் பரவலாக பெய்த மழையால் மக்கள் உற்சாகம்!

அபுதாபி, அல் ஐன், துபாய் , ராஸ் அல் கைமா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை மழை பெய்துள்ளதாக தேசிய வானிலை மையம் (NCM) தெரிவித்துள்ளது.

அமீரகம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்திருந்தது. குறிப்பாக வடக்கு, கிழக்கு கடலோரப் பகுதிகளிலும், துபாயின் ஜெபல் அலி பகுதியிலும், எக்ஸ்போ 2020 துபாய் தளத்தை சுற்றிலும் மழை பெய்துள்ளது. அதே போல், அபுதாபி மற்றும் ராசல் கைமாவின் சில பகுதிகளிலும் மழை பதிவாகியுள்ளது.

Rain-in-Hatta--Dubai_17e60ff9941_largeஇன்று காலை அபுதாபி மற்றும் அல் ஐன் பகுதிகளில் மழை பெய்தது. துபாயின் ஹட்டா பகுதியிலும் மழை பெய்தது. இந்நிலையில், அமீரகத்தின் பல பகுதிகளில் மழை பெய்துள்ளதையொட்டி, “மஞ்சள் எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 19ந் தேதி வரை இதே போன்று மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 20ந் தேதியிலிருந்து படிப்படியாக மழை குறையும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இன்று மணிக்கு 20-30 கிமீ வேகத்தில் காற்று மீண்டும் மீண்டும் வீசக்கூடும் எனவும், சில சமயங்களில் மணிக்கு 40 கிமீ வேகத்தில் காற்று வீசும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து அபுதாபி காவல்துறை இன்று காலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், மழை காரணமாக வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், மின்னணு தகவல் பலகைகளில் காட்டப்படும் வேக வரம்புகளை மாற்றுவதைப் பின்பற்றவும் வலியுறுத்தியுள்ளது.

அதே போல் துபாய் காவல்துறையும் ட்விட்டரில், போக்குவரத்து விதிகளை பின்பற்றுமாறு வாகன ஓட்டிகளை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அன்புள்ள ஓட்டுனர்களே, கனமழையின் போது, உங்கள் காருக்கும் மற்ற வாகனங்களுக்கும் இடையில் போதுமான மற்றும் பாதுகாப்பான இடைவெளியை கடைப்பிடிக்குமாறு” கேட்டுக்கொண்டுள்ளது.

புஹாசா மற்றும் யாவ் அல் நத்ரா ஆகிய இடங்களில் கனமழை பெய்துள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. டெல்மா தீவு, அல் ஷவாமேக் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.

அல் ஃபக்கா, அல் கஸ்னாவில் மிதமான மழையும், அபுதாபி – அல் அய்ன் சாலையில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்துள்ளது. அதே போல், அல் பதீன் விமான நிலையத்தில் லேசான மழை பெய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap