UAE Tamil Web

அமீரகத்தின் இந்தப் பகுதிகளில் மழை பொழியும் – இரவு நேரங்களில் கடற்கரைக்குச் செல்லவேண்டாம் – வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை..!

rain uae

அமீரகத்தில் இன்று வானம் பகுதி மேகமூட்டமாக இருக்கும் எனவும் கடலோர மற்றும் வடக்குப் பகுதிகளில் மழை பொழியும் என தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு மற்றும் நாளை காலை வேளைகளில் ஈரப்பதம் மிகுந்து காணப்படும்.

லேசானது முதல் மிதமானது வரையில் காற்று வீசக்கூடும்.

அரேபிய வளைகுடாவில் பகல் வேளைகளில் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றம் இருக்கும். ஆனால் இரவு மற்றும் நாளை காலை நேரத்தில் கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருக்கிறது.

ஓமான் கடலைப் பொறுத்தவரையில் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.