அமீரகத்தின் கிழக்கு மற்றும் கடலோரப்பகுதிகளில் பகுதி மேகமூட்டம் முதல் முழுவதுமான மேகமூட்டமாக வானம் இருக்கும் எனவும் நாட்டின் உட்பகுதிகள் மற்றும் தீவுப் பகுதிகளில் மழை பொழியலாம் எனவும் தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்திருக்கிறது.
இன்று (புதன்கிழமை) நாட்டின் உட்பகுதிகளில் அதிகபட்சமாக 32 டிகிரி வெப்பம் நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேசானது முதல் மிதமானது வரையில் காற்று வீசக்கூடும்.
அரேபிய வளைகுடாவைப் பொறுத்தவரையில் கடல் லேசானது முதல் கடும் சீற்றமாக இருக்கும் எனவும் ஓமான் கடல் மிதமான சீற்றத்துடன் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.