அமீரகத்தில் இன்று வடக்கிலிருந்து மேற்கு நோக்கி மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் இன்று இரவு 8 மணிவரையில் பொதுமக்கள் யாரும் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) எச்சரித்திருக்கிறது.
கடும் காற்று காரணமாக அதிகபட்சமாக 7 அடி வரையிலும் அலைகள் எழக்கூடும் என NCM தெரிவித்திருக்கிறது. குறிப்பாக அரேபிய வளைகுடா பகுதிகளில் நிலைமை மோசமாக இருக்கும் என NCM எச்சரித்திருக்கிறது.
#Alert #NCM pic.twitter.com/Xhq09Ij4wS
— المركز الوطني للأرصاد (@NCMS_media) November 18, 2020
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் வெப்பநிலை குறைந்து மழை பொழியலாம் மேலும் உட்பகுதிகளில் வெப்பநிலையானது அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் இருக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்திருக்கிறது.
அதேபோல இன்று இரவு மற்றும் நாளை நாளை வேளைகளில் நாட்டின் உட்புறப் பகுதிகளில் ஈரப்பதம் மிகுந்து காணப்படும். காற்றின் வேகம் பகல் வேளையில் அதிகமாக இருக்கும் என்பதால் புழுதி படலம் உருவாக வாய்ப்புள்ளது.
காலை வேளைகளில் அரேபிய வளைகுடா சீற்றம் மிகுந்தும் நாளின் பிற்பகுதியில் சீற்றம் ஓரளவு தணியும் எனவும் ஓமான் கடல் மிதமாக சீற்றம் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.