UAE Tamil Web

முக்கியச் செய்தி: 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று; 6 அடிக்கு எழும் அலைகள்: மக்களை எச்சரித்த தேசிய வானிலை ஆய்வுமையம்..!

sea

நாட்டின் உட்பகுதிகள் மற்றும் கிழக்குப் பகுதிகளில் அதிகாலை 3 மணிமுதல் 9.30 மணிவரையில் பனிமூட்டம் ஏற்படும் என்பதால் மக்கள் கவனமாக வாகனங்களை இயக்குமாறு தேசிய வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருக்கிறது.

மேலும் வட – மேற்காக காற்றானது மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்றும், கடலலைகள் 4 – 6 அடி வரையில் எழலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உட்பகுதிகளில்  21 – 25°C வெப்பநிலையும், கடற்கரைப் பகுதிகளில் 19 – 24°C வெப்பநிலையும் மலைப்பகுதியில் 16 – 21°C வெப்பநிலையும் பதிவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடற்கரைப் பகுதிகளில் ஈரப்பதமானது 60 – 80 ஆகவும், உட்பகுதிகளில் 70 – 95 ஆகவும், மலைப்பகுதிகளில் 40 – 60 ஆகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றானது 15 – 30 kmph வேகத்தில் வீசும், சில நேரங்களில் காற்றின் வேகம் உயர்ந்து 45 kmph ஐத் தொடும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. அரேபிய வளைகுடாவில் கடலானது சீற்றத்துடனும், ஓமான் கடல் ஓரளவு சீற்றத்துடனும் காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அடுத்த வாரத்திற்கான வானிலை அறிக்கை பின்வருமாறு:

 

sea
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap