UAE Tamil Web

மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் புழுதிக்காற்று: மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வுமையம்..!

sand wind

புழுதிக்காற்று உங்களுக்கு அலெர்ஜி என்றால் இன்று வெளியே செல்லவேண்டாம் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) எச்சரித்திருக்கிறது.

- Advertisment -

அமீரகத்தின் வடக்குப் பகுதியில் அதாவது ஷார்ஜா, ராஸ் அல் கைமா, புஜைரா ஆகிய பகுதிகளில் வானம் பகுதி மேகமூட்டமாக இருக்கும் என NCM தெரிவித்திருக்கிறது. குறிப்பாக புஜைராவில் தூசுக் காற்று வீசும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாளில் மணிக்கு 20 – 30 கிலோமீட்டர் வேகத்திலும் அதிகபட்சமாக 45 கிலோமீட்டர் வேகத்திலும் காற்றானது வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூசுக் காற்றினால் சாலைகள் கண்ணுக்குப் புலப்படுவதில் சிரமம் இருக்கலாம் என்பதால் பொதுமக்கள் கவனமாக செயல்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, தூசுக்காற்றினால் ஒவ்வாமை உண்டாகக்கூடிய நபர்கள் அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வெளியே செல்லுமாறு NCM தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக அமீரகத்தில் இன்று 20 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம் எனவும் காற்றில் ஈரப்பதம் 81 சதவிகிதமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் காற்று காரணமாக அரேபிய வளைகுடாவில் கடல் சீற்றமாக இருக்கும். இதனால் அலைகள் 8 அடி வரையிலும் எழலாம் என NCM வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்ன்காரணமாக மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.