அமீரகத்தில் இன்றும் நாளையும் நிலவும் தட்பவெப்பநிலை குறித்து தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) நேற்று இரவு தகவல் வெளியிட்டிருக்கிறது. அதில்,
சனிக்கிழமை
நாட்டின் உட்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வானம் பகுதி மேகமூட்டமாக இருக்கும், குளிர் மிகுந்து காணப்படும்.
வெப்பநிலை 2 டிகிரி செல்சியசிற்குக் குறையும்.
வடகிழக்கிலிருந்து கிழக்காக, குறிப்பாக கடல் புறத்திலிருந்து வடக்கு நோக்கி காற்று வீசும். மணிக்கு 15 – 25 கிலோமீட்டர் வேகத்திலும் சில நேரங்களில் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்றானது வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரேபிய வளைகுடாவின் வடக்குப் புறத்தில் கடலானது காலை நேரங்களில் சீற்றமாக இருக்கும் எனவும் ஓமான் கடல்பகுதியில் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை
நாட்டின் உட்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் வானம் பகுதி மேகமூட்டமாக இருக்கும், குளிர் மிகுந்து காணப்படும்.
வடக்கு நோக்கி மிதமான காற்று வீசும். மணிக்கு 15 – 25 கிலோமீட்டர் வேகத்திலும் சில நேரங்களில் 35 கிலோமீட்டர் வேகத்தில் காற்றானது வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடல்பகுதியில் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.