அமீரகத்தில் இன்று (திங்கட்கிழமை) வெப்பநிலையானது மிகவும் குறைந்து 2.7 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியிருக்கிறது.
அல் அய்னில் உள்ள தாம்தா பகுதியில் இன்று காலை 7.15 மணிக்கு இந்த குறைந்த வெப்பநிலை பதிவானதாக தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) அறிவித்திருக்கிறது.
இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இன்றைய நாளின் குறைவான வெப்பநிலை 5 டிகிரியாக இருக்கும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் NCM தெரிவித்திருந்தது.
அபுதாபியின் அல் வத்பா, அல் கஸ்னா, லிவா மற்றும் மேலும் சில மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் ஏற்பட்டது.
நாளின் பிற்பகுதியில் வானம் பகுதி மேகமூட்டமாக இருக்கும் எனவும், கடல், தீவு மற்றும் மேற்குக் கடலோரப் பகுதிகளில் வானம் மேகமூட்டமாக இருக்கும் எனவும் மழைபொழிய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.