UAE Tamil Web

வீடியோ: அபுதாபியில் இடியுடன் பெய்த மழை – வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என வானிலை ஆய்வுமையம் தகவல்..!

Rain-6

அபுதாபியில் இன்று காலை சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.  அபுதாபியின் காலிதியாவில் இருந்து முஷ்ரிஃப் பகுதி வரையில் இன்று காலை இடியுடன் கூடிய மழை பெய்ததாக தேசிய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக தேசிய வானிலை ஆய்வுமையம் வெளியிட்டிருந்த அறிக்கையில் புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் வெப்பநிலை குறைவதுடன் மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இன்று வானம் மேகமூட்டமாகவும் பகுதி மேகமூட்டமகவும் இருக்கும் என்றும் மாலையில் அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பொழியலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று புஜைராவில் மழை பெய்ததால், சாலைகளில் மழைநீரானது வெள்ளமென ஓடியது. பிரபல சமூக வலைத்தள பக்கமான ஸ்டார்ம் செண்டர் இந்த வீடியோவை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Rain-6
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap