UAE Tamil Web

மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்; 8 அடிக்கு உயரும் கடலலைகள் – மக்களை எச்சரிக்கும் வானிலை ஆய்வுமையம்..!

Rough Sea

அமீரகத்தில் இன்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும் கடல் அலைகள் 8 அடி வரையில் எழலாம் எனவும் தேசிய வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருக்கிறது.

- Advertisment -

இன்று மாலை 5 மணிமுதல் நாளை மாலை 5 மணிவரையில் வட – மேற்காக காற்றானது வீசலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திப்பா அல் ஹிஸ்ன், ஷார்ஜாவின் கோர் ஃபக்கான், புஜைராவின் அல் பிதியா ஆகிய இடங்களில் கடுமையான பனிமூட்டம் நிகழும் என்பதால் வாகனவோட்டிகள் கூடுதல் கவனமுடன் வாகனங்களை இயக்குமாறு வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

அமீரகம் முழுவதும் இன்று பொதுவாக தூசுக் காற்று வீசலாம் எனவும் வானம் பகுதி மேகமூட்டமாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

நாட்டின் உள் மற்றும் கிழக்குப் பகுதிகளில் பனிமூட்டம் உருவாவதால் இன்று இரவு மற்றும் நாளை காலைப் பகுதிகளில் ஈரப்பதம் அதிகமிருக்கும்.

அரேபிய வளைகுடாவைப் பொறுத்தவரையில் கடலானது சீற்றமாகவும், ஓமான் கடல் மிதமானது முதல் அதிக சீற்றமாகவும் இருக்கும் எனத் தெரிவிக்கப்படுள்ளது.