UAE Tamil Web

அமீரகத்தை சூழும் பனிமூட்டம் : வானிலை ஆய்வுமையம் எச்சரிக்கை..!

UAE weather warning

அமீரகத்தில் இன்று அதிகாலை 3 முதல் 9 மணி வரையில் கடலோரப்பகுதிகள் மற்றும் வடக்குப் பகுதிகளில் பனிமூட்டம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், வாகனவோட்டிகள் கவனத்துடன் செயல்படுமாறும் தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) எச்சரித்திருக்கிறது.

- Advertisment -

பொதுவாக அமீரகம் முழுவதிலும் இன்று பகுதி மேகமூட்டமாக வானிலை நிலவும் எனவும், உட்பகுதிகளில் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் NCM தெரிவித்திருக்கிறது.

இன்று இரவு மற்றும் நாளை காலை கடலோரப் பகுதிகளில் ஈரப்பதம் மிகுந்து இருக்கும். லேசானது முதல் மிதமானது வரையில் காற்று வீசக்கூடும்.

அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடலில் லேசான சீற்றம் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.