UAE Tamil Web

மழைப்பொழிவு, கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் – எச்சரிக்கும் வானிலை ஆய்வுமையம்..!

Rain UAE

அமீரகத்தின் மேற்கு உட்புறப் பகுதிகளில் இரவு 2 மணிமுதல் காலை 9.30 மணிவரையில் ஈரப்பதம் மற்றும் பனிப்புகை அதிகமாக இருக்கும் என தேசிய வானிலை ஆய்வுமையம் (NCM) தெரிவித்திருக்கிறது.

இன்றைய நாளின் பிற்பகுதியில் வானம் பகுதி மேகமூட்டமாகவும் கடற்பகுதிகள் வடக்குப் பகுதிகளில் பகுதி மேகமூட்டமாகவும் சில நேரங்களில் மழைபொழியவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் உட்பகுதியில் அதிகபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் இருக்கும்.

இன்று இரவு மற்றும் நாளை காலை வேளைகளில் நாட்டின் கிழக்குப் பகுதியில் ஈரப்பதம் மிக அதிகமாக இருக்கும் என NCM தெரிவித்திருக்கிறது.

லேசானது முதல் மிதமானது வரையில் காற்றானது வீசும். நாளின் பிற்பகுதியில் வடமேற்கில் காற்று அதிவேகத்தில் வீச வாய்ப்பு இருக்கிறது. இதனால் கடலோர மற்றும் நாட்டின் மேற்குப் பகுதியில் மணற் புயல் வீசலாம்.

அரேபிய வளைகுடாவைப் பொருத்தவரையில் கடலானது சீற்றமாகவும் சில நேரங்களில் மிக சீற்றமாகவும் காணப்படும். ஓமான் கடலில் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றம் இருக்கலாம்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap