அமீரகத்தில் இன்று அதிகாலை 3 மணிமுதல் 9 மணிவரையில் பனிமூட்டம் ஏற்படும் எனவும் இதனால் சாலைகள் கண்ணுக்குப் புலப்படுவதில் சிரமம் இருக்கலாம் எனவும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்திருக்கிறது.
நாட்டின் உட்புறத்திலும் கடலோரப்பகுதிகளில் குறிப்பாக மேற்குப் பகுதிகளில் பனிமூட்டம் அதிகளவில் இருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளின் பிற்பகுதியில் சூரிய ஒளி மிகுந்தும் வானம் பகுதி மேகமூட்டமாகவும் இருக்கும் எனவும் NCM அறிவித்திருக்கிறது.
A chance of fog formation with deterioration of horizontal visibility over some internal and coastal areas especially westward from 03:00 AM till 09:00 AM Thursday 03/12/2020. pic.twitter.com/bk9Mkc7HsO
— المركز الوطني للأرصاد (@NCMS_media) December 2, 2020
அதிகபட்சமாக நாட்டின் உட்பகுதியில் 31 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு மற்றும் நாளை காலை வேளைகளில் நாட்டின் உட்பகுதி மற்றும் கடலோரப் பகுதிகளில் ஈரப்பதம் மிகுந்து காணப்படும்.
லேசானது முதல் மிதமானது வரையில் காற்று வீசும்.
அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடலில் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றம் இருக்கலாம்.