UAE Tamil Web

அமீரகத்தில் இந்த மாதத்தில் வரவிருக்கும் 3 நாள் தொடர் விடுமுறை..!

UAE Holidays

அமீரகத்தில் வார விடுமுறை நாட்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. ஜனவரி 1, 2022 ஆம் தேதிமுதல் இப்புதிய அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, வெள்ளி மதியம் துவங்கி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

3 நாட்கள் விடுமுறை

டிசம்பர் 31 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வருகிறது. ஆகவே அன்று வார விடுமுறை விடப்படும் (தற்போது இருக்கும் நடைமுறையின்படி) ஜனவரி 1 ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் ஜனவரி 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் புதிய வார விடுமுறை அறிவிப்பின்படி அந்த இரண்டு நாட்களும் விடுமுறைகளாக இருக்கும்.

ஆக மொத்தம் 3 நாட்கள் விடுமுறை கிடைக்க இருக்கிறது. இருப்பினும் புதிய வார விடுமுறை மாற்றம் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தனியார் நிறுவனங்களும் இந்த விதிமுறையை பின்பற்ற அரசு வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap