UAE Tamil Web

காஷ்மீர் பகுதியில் போர் நிறுத்தத்தை அறிவித்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் – மகிழ்ச்சியளிப்பதாக அமீரக அரசு தகவல்..!

UAE External Affairs

காஷ்மீரின் சர்ச்சைக்குரிய இடங்களில் போர் நிறுத்தத்தை அறிவிப்பதாக இந்தியாவும் பாகிஸ்தானும் அறிவித்துள்ளதை வரவேற்பதாக அமீரகம் தெரிவித்துள்ளது.

அமீரக வெளியுறவுத்துறை மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு அமைச்சகம் அமீரகம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடன் பல்லாண்டுகளாக நட்புடன் பழகிவருவதாகத் தெரிவித்துள்ளது.

இந்த உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பு அளித்த இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அமைச்சகத்தின் அறிக்கையில் சுட்டப்பட்டுள்ளது. மேலும், பிராந்தியத்தில் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை அடைவதற்கான முக்கியமான படி இதுவாகும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இருநாட்டு நன்மையை முன்னிட்டு, காஷ்மீரில் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு முயற்சி எடுக்கவேண்டும் என அமீரகம் இருநாடுகளையும் வலியுறுத்தியுள்ளது.

ராஜாங்க உறவுகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமாக இரு நாட்டு மக்களிடையே நீடித்த அமைதி, நலத்தினை உறுதிப்படுத்த வேண்டிய முயற்சிகள் எடுக்கவேண்டும் என அமைச்சம் தெரிவித்துள்ளது.

 

UAE External Affairs
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap