UAE Tamil Web

உங்களுடைய வாட்சாப் ஹேக் செய்யப்பட்டுவிட்டால் உடனடியாக இதைச் செய்யுங்கள்…!

whatsapp

ஒருவரது வாட்சாப் ஹேக் செய்யப்பட்டுவிட்டால் என்ன செய்யவேண்டும்? என்ற விதிமுறைகளை அமீரக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிடல் அரசு ஒழுங்குமுறை ஆணையம் (TDRA) வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கணிசமான மக்களால் பயன்படுத்தப்பட்டுவரும் வாட்சாப்பை குறிவைத்து பல ஹேக்கர்களும் செயல்பட்டுவருகிறார்கள். தகவல் திருட்டு பயம் இன்று பலரையும் வாட்டி வரும் நிலையில் TDRA இந்த விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ஒருவேளை உங்களுடைய வாட்சாப் ஹேக் செய்யப்பட்டதாக நீங்கள் நினைத்தால் உடனடியாக வாட்சாப் தொழில்நுட்ப குழுவிற்கு தகவலை தெரியப்படுத்தவேண்டும். அதாவது support@whatsapp.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது புகாரை அளிக்கவேண்டும். முக்கியமாக “Lost/Stolen: Please deactivate my account” என்பதைக் குறிப்பிடவேண்டும்.

கூடுதலாக உங்களது போன் நம்பரை பின்வருமாறு குறிப்பிடவேண்டும் எ.கா:+9715xxxxxxxx.

மக்கள் ஒரே நாளில் பல்வேறு நேரங்களில் வாட்சாப்பை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு மீண்டும் டவுன்லோடு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. போலவே, தினமும் வாட்சாப்பை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் டவுன்லோடு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

உங்களுடைய வாட்சாப் ஹேக் செய்யப்பட்டுவிட்டால் உங்களது நண்பர்கள்/உறவினர்கள் ஆகியோரிடம் உங்களது வாட்சாப்பில் இருந்து வரும் தகவல்களுக்கு பிரச்சினை சரியாகும் வரையில் பதிலளிக்கவேண்டாம் எனத் தெரிவிக்குமாறு ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

whatsapp
3 Shares
Share via
Copy link